மனைவி: ஏங்க!, புதுசா பேன், கிரைண்டர், மிக்ஸி தராங்களாமா!? எல்லாமே இலவசம்!!! சந்தோசமா இருக்குங்க.. நெறைய பொருள் கெடைக்க போகுது, நமக்கு செலவு மிச்சம். நெறைய காசு மிச்சம்.
இந்தத் தடவை இலவசம் கொண்டுவந்த மாதிரியே இதுக்கு முன்னாடி இருந்து DMK நெறையா கொடுத்திருந்தா இந்நேரம் நமக்கு எத்தனை சொத்து வந்திருக்கும்ன்னு யோசிக்கும் போதே ஒரே குசியா இருக்குது. சத்யமா என்னோட ஓட்டு ஒண்ணா DMK இல்லனா ADMK குதான். (ஹி ஹி ஹி!!! அப்போ தமிழ்நாடு நாசமா போய்டும் சீக்கிரம்)
கணவன்: இப்டி உன்ன மாதிரி பொம்பளைங்க இருக்கிறதுனால தான் கிரைண்டர், மிக்ஸியா தரானுங்க!!!
மனைவி: அப்போ அடுத்ததடவ 20 சவரன் தங்க நகை தருவாங்கன்னு சொல்லுங்க (ஆ..ஆ...ஆ..!!!)
கணவன்: மானங்கெட்ட நாய்ங்க, ஊராநூட்டு காச வாங்கி டிவி கம்பெனி ஆரம்பிப்பானுங்க, லச்சம் கோடிய இஷ்பெக்ட்ரம்ல பிச்சையெடுத்து, பிரமாண்ட அரண்மனை கட்டுவானுங்க (spectrum raja's house கூகிள் ல பாருங்க), 10 பொண்டாட்டி கட்டிக்கிட்டு, ஒரு ஊரு மாதிரி குடும்பத்த வச்சிக்கிட்டு, எல்லாருக்கும் மந்திரி வேல, எல்லாருக்கும் ஒரு டிவி கம்பெனி, எல்லாருக்கும் பாத்த எடத்துல கம்பனி (சங்கு ஊதணும் மொதல்ல)
மனைவி : "அது அவரோட தனித் திறமை, அரசியல் தந்திரம்ங்க" (சத்யமா ஒரு மாநிலத்தையே கொல்லயடிகறதுக்கு திறமை வேண்டும்)...
கணவன்: நீ நிறுத்து மொதல்ல!! பத்திகிட்டு வருது... என்ன புடுங்கிட்டு திறமை, பல இலச்சம் கோடி ஊழல் பன்றதெல்லாம் திறமையா?. எவனப்பநூட்டுக் காசு ?? (என்னவேனாலும் திட்டி போஸ்ட் போடும்மா, ஒரு ஓட்டு மட்டும் போடு !!! )
மனைவி: நல்லவற, ஒரு வல்லவர, நாட்டையே தூக்கி நிறுத்தர, உலக மகா உன்னத மனிதரை தானே யோசிச்சு, (யோசிச்சா???) இவரு மட்டும் முதலமைச்சரா வந்தா நாடு சத்யமா உருப்படும்னு தேர்ந்தெடுத்து உக்கார வச்சிருக்கிங்க? அப்றோம் ஏன் அவர் மேல இவ்ளோ காண்டு?, வயசானவர், நாட்டை தூக்கிக் கட்டிட்டு மன்னிக்கணும் தூக்கி நிறுத்திட்டு தான் போவேன்னு இருக்கிறார், அவரோட நேர்மை இப்டி நடுரோட்ல சாகக் கிடக்குதே! (படிச்சிட்டு இருக்கற உங்க எல்லார் மேலயும் சத்யம் பண்ணி சொல்றேன், கலைஞர் அய்யா ஊருக்கு மட்டுமே உழைக்கிற உத்தமர்). பிடிக்காட்டி பேசாம ADMK க்கு போட்டுட்டு போங்க. காசா பணமா ஒரு ஒட்டு தானே?!
கணவன்: இதுதானே இத்தனை வருசமா நடந்துட்டு இருக்குது. ஜெயலலிதா வந்தா மட்டும் கிழிச்சிருமா? ரெண்டு பேரையும் மாத்தி, மாத்தி தானே பார்த்திருக்கோம். (சந்தக்கடை போல, மாத்தி, மாத்தி திட்டிக்கிரானுங்க) நிச்சயம் இந்த தேர்தல்ல " நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு" தான் ஓட்டுன்னு நெனச்சா, அந்த கேனப்பயன் என்னடானா கூட்டணி வச்சிட்டான்.
கணவன்: இதுதானே இத்தனை வருசமா நடந்துட்டு இருக்குது. ஜெயலலிதா வந்தா மட்டும் கிழிச்சிருமா? ரெண்டு பேரையும் மாத்தி, மாத்தி தானே பார்த்திருக்கோம். (சந்தக்கடை போல, மாத்தி, மாத்தி திட்டிக்கிரானுங்க) நிச்சயம் இந்த தேர்தல்ல " நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு" தான் ஓட்டுன்னு நெனச்சா, அந்த கேனப்பயன் என்னடானா கூட்டணி வச்சிட்டான்.
கண்ணா, நீ தண்ணியப் போடு, பீரக் குடி..... என்னமோ செய்.... (பட் உன்னோட அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு) தண்ணி போடாம மேடைக்கு வந்தவனெல்லாம் ஒரு மண்ணும் செய்யல.
அதனால உன்மேலயும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு பலருக்கு...... போச்சு இப்போ நீயும் தேறாத கேஸ்.... (அரசியல் சாராத, சமூக அக்கறை கொண்ட, மௌனமாய் அழுது கொண்டிருக்கும் என் போன்ற, இதை படிக்கும் நீங்கள் கூட விஜயகாந்த்க்கு போடலாமா என்று 1% யோசித்துதான் இருப்பீர்கள் என்பதை நான் உறுதியாக சொல்லுவேன்)....
இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க இப்போ ஒருத்தர் மட்டுமே இருக்கார் நம்ம தமிழ் நாட்டுல. அவர்தான் தமிழகம் காக்கப் பிறந்த, உலகம் ஆளப் பிறந்த நம்ம அண்ணன் "வடிவேலு" (எங்கே போகும் இந்தப் பாதை.......பாட்டுங்க சாமி)
மனைவி : "அப்போ ஓட்டே போடாதிங்க." போய் வேலையப் பாருங்க (நல்ல யோசனை)
கணவன்: நானும் அப்டி தான் நெனச்சிட்டு இருந்தேன், ஆனா நாம தேர்ந்தெடுக்கற அந்த ஒரு மனிதர் (முதலமைச்சர்) மட்டும் உண்மையானவரா இருந்தா, எவ்வளவு கீழ் நிலையில் அந்த நாடு இருந்தாலும் சத்யமா அதுக்குக்கு விமோசனம் தான். அப்படி இல்லாம இருந்தா, எத்தனை வசதி, வாய்ப்புகள், அற்புதமான இளைய தலைமுறை, இப்டி காலுக்கு அடியிலேயே பல வசதி வாய்ப்புன்னு எது இருந்தாலும் இதோ இப்போ நம்ம தமிழ்நாடு மானங்கெட்டு, மஞ்சல வித்து நாறிட்டு இருக்கோமே,, விலைவாசி, அக்கிரமம், ஊழல், பாரபட்சம், ஏழ்மை, நலிவு, தொய்வு, பொது சொத்தை (நம்ம காசுங்கோ) அவனவன் குடும்பத்துக்கு பயன்படுத்துவது...... இப்டி, இப்டி, இப்டியே போனா ஒரு நாள் நாம எல்லாரும் நாசமா போய்டுவோம்.
ஓட்டு போடறதும், போடாததும் என்னோட விருப்பம்ன்னு இருந்தவன் தான் நானும், ஆனால் இதனுடைய விளைவை அனுபவிப்பதிலிருந்து யாருமே, ஏன் பிறந்த பிள்ளை கூட தப்பிக்க முடியாது என்பது புரிந்த பின்பு ஓட்டு போடுறதோட மகிமை புரியவந்துச்சு.
அதைவிட மேலாக, ஒரு பரதேசி வாங்கித் தர்ற பிரியாணி, பீரு இதுக்காக ஓட்ட வித்தா (பிரியாணி (Rs.70) + பீர் (Rs.200) = 270) மேலே சொன்ன விலைவாசி, ஊழல் இது போல தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் குறைந்தது வருடம் Rs.10000 செலவு நம்ம தலையில தான்..
அதைவிட மேலாக, ஒரு பரதேசி வாங்கித் தர்ற பிரியாணி, பீரு இதுக்காக ஓட்ட வித்தா (பிரியாணி (Rs.70) + பீர் (Rs.200) = 270) மேலே சொன்ன விலைவாசி, ஊழல் இது போல தடுக்கி விழுந்ததுக்கெல்லாம் குறைந்தது வருடம் Rs.10000 செலவு நம்ம தலையில தான்..
இதெல்லாம் நீங்க கொடுக்கற கிரைண்டர், மிக்ஸியைவிட காஷ்ட்லிங்க..... (கூட்டிக் கழிச்சு, வகுத்து பாத்துக்குங்க, ஆனா கணக்கு மட்டும் சரியா இருக்கும்)
மனைவி: அப்போ நம்ம போடுற ஓட்டு இவ்வளவு சக்தி வாய்ந்ததா?
கணவன்: ஆமா, உண்மையானவருக்கு ஓட்டுப் போட்டா நல்லது. அப்படி இல்லாமல் போவது தனிமனிதனுக்கும், ஒட்டு மொத்த நாடுக்குக்குமே ஆபத்துதான்.
கணவன்: ஆமா, உண்மையானவருக்கு ஓட்டுப் போட்டா நல்லது. அப்படி இல்லாமல் போவது தனிமனிதனுக்கும், ஒட்டு மொத்த நாடுக்குக்குமே ஆபத்துதான்.
5த் பில்லர் ன்னு ஒரு சமூக அமைப்பு (http://india.5thpillar.org/) விசில் சின்னத்துல நிக்கறாங்க. இது போல சத்தமே இல்லாம அரசியல் சாராத ஒரு அமைப்பு தேர்தல்ல நிக்கறது, உண்மையான சமூக அக்கறையோட செயல்படனும்னு இறங்கியிருப்பது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.
49 o ன்னு, ஒரு வசதி இருக்கு, ஓட்டு இயந்திரத்துல. இதனுடைய சின்னம் " நம்ம அசோக சக்கரம்". யார்க்கும் ஓட்டு போட விரும்பலேனா இதுக்கு போடலாம்.
எப்ப பாரு ADMK, DMK வுக்கே போட்டு போட்டு சலிச்சு போயி குற்ற உணர்வா இருந்த எனக்கு, இந்த செய்தி உண்மையாகவே சந்தோசமாக இருக்கு.
மனைவி : ஆமா, 5த் பில்லர் நாளைக்கே ஆட்சிக்கு வந்து, வெளிநாட்ல இருக்கற கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி, கோடி ,கோடி, இலச்சத்த எடுத்து வந்து நாட்டுக்கு நல்லது செஞ்சிடப் போறாங்களாக்கும்???..
கணவன்: அப்படி இல்ல, அவங்க தேர்தல்ல நின்னு ஜெயிக்கலனாலும், இது ஒரு வரவேற்கத்தக்க தொடக்கம் இல்லையா?? (நெஞ்ச தொட்டு சொல்லுங்க, நம்ம எல்லோரும் ஒரு உதாரண தலைவன் ஆட்சிக்கு வரணும்னு தானே விருப்பம்?)
மனைவி: கரென்ட் போய் 5 மணிநேரம் ஆச்சு, எத்தனை தடவ சொல்லித் தொலைக்கறது ஒரு மெழுகுவத்தி வாங்கிட்டு வாங்கனு சொல்லி. ??? இந்த மானகெட்ட கரென்ட் எப்ப போகுது, எப்ப வருதுனே தெரியமாடிங்குதே?
கணவன்: சரி சரி இரு போய் வாங்கிட்டு வரேன், பொலம்பாத.....(தமிழகத்தின் மாபெரும் எதிரி, எதிரி......... "கரண்டு" தான்)
No comments:
Post a Comment