Tuesday, 12 April 2011

உன்னத தமிழக அரசியல்

சூற நாற்றம் வீசும், 
பன்றி  வாழும் இடமெல்லாம் 
அசிங்கமும், ஆரவார கருமமும்,  

கயவன், புழு பூச்சி மேல்
உல்லாச ஆட்சி காண்கிறான்; 
இந்த பரிதவிக்கும் நாடோ 
கூற்றுவனை குன்றில் ஏற்றிவிட்டதற்காய் 
விசனப்பட்டே மலடாகிப் 
கிடக்கிறது..

மாற்றி மாற்றி எம் நாட்டை 
கற்பழித்து கதியற்றுப் போக
விட்டு,
விழா விழுகிறது 
அவர்களின் வீடுகளில் மட்டும்.

ஆட்சி மாறும் 
ஊழல் கைமாறும்;
மாற்றம் வேண்டி 
ஊரே எதிர்பார்க்கும்,
இன்று வரும் நாளை வரும் என்று 
நாட்கள் மட்டும் நகர்ந்து போகும்,

மாற்றி மாற்றி கற்பெடுத்துப் போட்ட பின்னே,
ஐந்தாண்டு முடிந்த பின்னே,
அந்தக் கூற்றுவன் மட்டுமே வேண்டும்
ஆட்சி செய்ய......
















No comments:

Post a Comment