Saturday, 9 April 2011

ஏர்செல் ஒரு திருட்டு கம்பெனி

கொள்ளை அடிக்கிறதுக்குன்னே கம்பெனி வச்சி இருக்கிறவங்க லிஸ்ட்ல  இந்த ஏர்செல் காரனுங்களுக்கு தான் முதல் இடம். என்னோட கைபேசிக்கு, தினமும் தவறாம வர அழைப்பு இவங்ககிட்ட இருந்துதான்.....   

 நாம ஹலோ சொல்ற வரைக்கும் காத்து இருக்கும் (என்ன ஒரு கிரியேடிவிட்டி).
நமக்கு முக்கியமான வேலை இருக்கும், அட யாரோ கூபிடுராங்கனு போய் எடுத்தா, " டிங் டிங்..டிங்.....  "உங்களின் அன்பிற்குரியவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்த" இந்த பாட்டு பிடிச்சிருந்தா எண் ஒன்றை அழுத்தவும் (கல்யாணம் ஆகி பத்து வருசமாச்சு!!)

அவசராம யாரேனும் ஒருவரின் கூப்பிடுதலுக்காகக் காத்திருப்போம்....
காலும் வரும், அவசர அவசராம எடுத்துப் பேசினா "உங்களின் உல்லாசப் பயணத்திற்கு எங்களின் பிரத்தியேக சேவையைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு அறிய வாய்ப்பு, இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள எண் இரண்டை அழுத்துங்கள் "   (செருப்பால அடிப்பேன்டா....)

இவனுங்களோட இதே தொல்லையா போச்சு தினமும் (வர்ற கோவத்துல, கையில கெடைக்கிற கட்டய எடுத்து போடணும் போல இருக்கு)..... 

பின்ன என்னங்க, ஒரு பத்து தடவையாவது கூப்பிட்டுரானுங்க தினமும் (சும்மா சொல்லக் கூடாது, லவெர்ஸ் கூட இப்டி கூப்பிடமாடங்கனு நெனக்கறேன்).

சரி போனா போகுதுன்னு விட்டுட்டேன்....

ஒரு நாள், ரீசார்ச் பண்ணினேன், அம்பது ரூபாய் புல் டாக் டைம்ல (எப்போ புல் டாக் டைம் வரும்னு காத்திருந்து பண்ணினேன்). அம்பது ரூபா இருக்கவேண்டிய எடத்துல இருபது ரூபா இருந்தா எப்படி இருக்கும்? நண்பர்கள் கிட்ட கேட்டதுக்கு அவங்க பொலம்பி தள்ளிட்டாங்க..... ஆமாங்க, எனக்கும் தான் இப்டி போய்டுச்சு, எனக்கும் தான் போய்டுச்சுன்னு அழாத குறை...... 

எதுக்கு காசு எடுக்கணும் ? யார கேட்டு எடுத்தாங்க?, எப்போ எனக்கு தகவல் சொன்னாங்க பணம் எடுக்க போறேன்னு? எந்த குறுஞ்செய்தியும் அனுப்பாம?...... யாரு காசு? என்னோட காசை என்ன கேக்காம எப்டி பிடிக்க முடியும்? எடுத்த பின்னாடியும் எந்த குறுஞ்செய்தியும் வரல...... எனக்கு ஒன்னும் புரீல.. பல கேள்வி... 

சரின்னு கஸ்டமர் கேர்குக் கூப்பிட்டா (காசு புடுங்கவே, வச்சிருப்பானுங்க போல)...... அடா... அடா..... என்ன ஒரு வரவேற்பு என்ன ஒரு வரவேற்பு..... என்ன விசயத்துக்கு கூப்பிடுரமோ அதையே மறக்கடிக்க வச்சிடுவானுங்க. , ஒண்ண அமுத்துங்க, அப்பறோம் நால அமுத்துங்க, அப்றோம் ரெண்ட அமுத்துங்க, அப்றோம் ஒரு மியூசிக் ..... அப்றோம் தொடர்பில் காத்திருந்தமைக்கு மிக்க நன்றி !!, (உங்க காச நாங்க தானே புடுங்கி வசிருக்கக்கோம், நன்றி கூட சொல்லாம இருக்க முடீமா?) "உங்களின் கால் எங்கள் சேவை மைய அதிகாரிக்கு மற்றும் வரை காத்திருக்கவும்"  (பின் லேடன் கிட்ட கூட ஈஸியா பேசிடலாம் போல இருக்கே!!).....

நம்ம குறைய சொல்லி, கேள்வி கேட்டா, " மன்னிக்கவும் இந்த வசதி எங்களிடம் இல்லை" ன்னு சொல்லுவாங்க (இதை சொல்லவா ஒரு கஸ்டமர் கேர்!!!! ???)........  

சரி, விடுங்க நம்ம மேட்டர்க்கு வரேன்,

என்னோட காச பிடிச்சதுக்கு காரணம் கேட்டேன், அவங்க " சார், நீங்க தான் இந்த ஆப்ஷன் வேணும்னு கேட்டு இருக்கீங்க" ன்னு சொன்னாங்க. எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு!!, பத்திக்கிட்டு வந்துச்சு கோவம்.

சரி அப்டி என்னதான் ஆப்ஷன்னு கேட்டேன், "முகம் தெரியாதவர்களுடன் பேசி, உங்கள் நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொள்ள" ன்னு சொன்னங்க..

இல்ல மேடம், "அப்டி எதுவும் நான் கேட்கல"  ன்னு சொன்னா, அவங்க இன்ன தேதியில, இன்ன ஆப்ஷன் வேணும்னு எங்களுக்கு உங்க மொபைல்ல இருந்து SMS வந்திருக்கு" ன்னு சொல்றாங்க.  (எங்க போய் சொல்லி அழறது?).

இதுல இன்னொரு கூத்து என்னன்னா, " அவங்க அனுப்பின அந்த சர்வீஸ் SMS க்கு என்னோட கணக்குல இருந்து காசு எடுத்துட்டேன்னு சொன்னாங்க.
 சரி, ஏதோ அனுப்பினது, அனுப்பிட்டிங்க, நீங்க அனுப்பின SMS க்கு எதுக்கு என்னோட காசை பிடிக்கரீங்க ன்னு கேட்டேன்?.

நீங்க தான் இந்த சேவை வேணும்னு SMS அனுப்பி இருந்தீங்க, அதான் பணம் உங்க கணக்குல இருந்து எடுத்திருக்கோம் ( மவனே சிக்குனே சங்கு தான்...) 

ஒருவழியா, விளக்கம் கேட்பது போய், விவாதம் ஆகி, அது முற்றிப் போய், சண்டை போட்டு, சத்தம் போட்டு, சலித்துப் போய், BP  எகிறிப் போய், சலித்துப் போய்.....  ஒருவழியா தோற்றுப் போய்  விட்டுட்டேன்..

அப்றோம் அடுத்த மாசமும் அதே போல 30 ரூபாய் பிடிச்சிட்டாங்க. 
திரும்பவும் அதே பழைய கதி தான் நடந்துச்சு. 


இப்போ வேகத்தைவிட, விவேகமா யோசிச்சு நடந்தேன். (இடையில் ஒரு நண்பரின் வலை தலத்தில் இப்டி காசு போயிட்டா (திருடிட்டா),  என்ன வழிமுறையில் பணத்தை திரும்பப் பெறலாம்ன்னு விளக்கமா போட்டு இருந்தாங்க)..

1. முதலில் கஸ்டமர் கேர்க்கு கூப்பிட்டு எப்பவும் போல விளக்கம், விவரம் கேளுங்க. பணத்த திரும்ப கணக்குல வரவு வைக்க சொல்லுங்க. (அவங்க கண்டிப்பா முடியாதுன்னு சொல்வாங்க).

2. ஏர்செல் nodal officer மின்னஞ்சல் முகவரிக்கு உங்க காசை திரும்ப கேட்டு ஒரு மின்னஞ்சல் போடுங்க (அந்தந்த பகுதிக்கு தனியாக நோடல் அலுவலர் இருப்பார், இணையத்தில் தேடுங்க)

3. எனக்கு அடுத்தநாளே பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது.. என்ன கொஞ்சம் மெனக்கெடனும்.















No comments:

Post a Comment